மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 12:15 IST
நீலகிரி மாவட்டம், சேரம்பாடி டான்டீ, ஏலியாஸ் கடை ஏலமன்னா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதில் 15 யானைகள் ஏலியஸ் கடை புல் மேட்டில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ளன. பந்தலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில், யானைகள் முகாமிட்டு இருப்பதால் சேரம்பாடி மற்றும் தேவாலா வனத்துறையினர் இந்தப் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை கூட்டம் தண்ணீர் குடிக்க சாலையை கடந்து செல்லும் நிலையில், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் செல்லவும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதை தவிர்க்கவும் வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து