மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 12:37 IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாந்தோப்பில் மாப்பிள்ளை விநாயகர், மஹாமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 7 ம்தேதி காலை கணபதி ஹோமம், கோபூஜை, யாத்ரா ஹோமம் , சோம கும்ப பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடனது. கோயிலை வலம் வந்து கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாப்பிள்ளை விநாயகர், மகா மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து