மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 12:44 IST
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரை ரோட்டோரங்களில் பேரூராட்சிகளில் இருந்து டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் ஏற்படுவதுடன் காற்றில் பறந்து டூவீலர்களில் செல்வோர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கின்றனர். சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டமாகி காற்று மாசு ஏற்படுவதுடன் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் பயனில்லை. இங்கு கொட்டப்படும் குப்பையை பிரித்து பல்வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து