Advertisement

மலைப்பாதை சாலையில் கம்பீரமாக சென்ற சிறுத்தை

மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 13:00 IST

Share

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. திம்பம் மலைப்பாதையில் கனரக மற்றும் வெளி மாநில வாகனங்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் அதிகமாக சாலையை கடந்து செல்கின்றன. இன்று அதிகாலை திம்பம் மலைப்பகுதி, தேசிய நெடுஞ்சாலையில், சிறுத்தை ஒன்று கம்பீரமாக சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுகள் வீடியோ எடுத்தனர். வாகன ஓட்டிகளை கண்ட சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று மறைந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X