மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 14:14 IST
திருவள்ளூரில் தங்கம், வெள்ளி, பணம், புடவையை அள்ளிக்கொண்டு ஓடிய கொள்ளையர்கள் திருவள்ளூர் அடுத்த தொழுவூரை சேர்ந்த விவசாயி அகிலன். தாயார் கவுசல்யாவுடன் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை தோட்டத்துக்கு சென்ற அகிலன் இரவில் அங்கேயே தங்கினார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதே பகுதியில் உள்ள அகிலனின் சித்தி வீட்டுக்கு கவுசல்யா போனார். இரவில் துாங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்தார். கதவு உடைந்து கிடந்தது. மகனை கூப்பிட்டார். அகிலன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 40 சவரன் நகை, 5,61,000 ரூபாய், 3 கிலோ வெள்ளி, 24 பட்டு புடவை கொள்ளை போய் இருந்தது. மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து