மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 15:09 IST
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் மதுரை ஃபெட்கிராட் நிறுவனம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மற்றும் வீட்டு உயோக பொருட்களை பழுது நீக்குதல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா ஃபெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையில் நடந்தது. தலைவர் சுருளி, பொருளாளர் சாரா ரூபி முன்னிலை வகித்தனர். பயிற்சி முடித்த 150 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுய தொழில் துவங்கும் பெண்களுக்கு வங்கிக் கடன் மற்றும் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக நகர்ப்புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் வெள்ளபாண்டி, சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் சத்யாதேவி, உமா சங்கர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து