மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 16:04 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது. கூடலூர் வனத்துறை சார்பில் தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில், வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்வது மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பது, வனவளத்தை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த பொம்மலாட்டக் குழு பிரியா தலைமையில் பொம்மலாட்டம் மற்றும் நடனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து