மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 16:41 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் நடக்கிறது. 9ம் நாளில் தீர்த்தவாரி உற்சவம் துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் நுாற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அத்தி வரதர் இருக்கும் அனந்த சரஸ் குளத்துக்கு பிரணகதி வரதர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். திரளான பக்தர்கள் முன்னிலையில் பட்டாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பிரணகதி வரதர் குளத்தில் மூழ்கி எழுந்தார். அவருடன் பக்தர்களும் நீராடினர். கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி முழக்கமிட்டனர்.
வாசகர் கருத்து