மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 18:31 IST
திருப்பத்தூர் மாவட்டம் தோட்டி குட்டையில் வேலூர் சஞ்சீவி மயில்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 5 ம் தேதி விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. இன்று நான்காம் யாகசால பூஜைகள் முடிந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து கோபுர விமானங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. சஞ்சீவி மயில்மலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து