மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 21:50 IST
சிகரெட் உயிரை கொல்லும் என்று பெரிய எழுத்துக்களில் சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிட்டு விற்றாலும் அதை படித்து விட்டு புகைப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. சிகரெட் புகைப்பவருக்கு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதன் புகை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதைவிட கொடியது சிகரெட்டை புகைத்து விட்டு மண்ணில் நாம் வீசும் மிச்சமிருக்கும் சிகரெட் கழிவில் உள்ள பில்டர் என்று சொல்லக்கூடிய பஞ்சு. அது மறைமுகமாக நம்மைக் கொல்லக்கூடியது. சிகரெட் பில்டர் மண்ணில் மக்குவதற்கு 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிகரெட் பில்டரினால் உழவன் தோழன் என்று அழைக்கப்படும் மண் புழு பாதிக்கும். மண் வளம் குன்றி விடும். பில்டர் தண்ணீரில் கலந்தாலும் விஷத் தன்மையாவதற்கு வாய்ப்புள்ளது. அதை குடிக்கும் உயிரினங்களும் இறக்க நேரிடும். பூமிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிகரெட் பில்டரை மறுசுழற்சி வாயிலாக பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
வாசகர் கருத்து