மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 13:06 IST
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. செண்பகவல்லியம்மன் சமேத ஜெகநாத பெருமாளுக்கு சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும் நடந்தது. அக்னி வளர்த்து பட்டாசாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாணம் . நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து