மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் பொறுத்தபட்டுள்ளன. இதில் விளக்கு பழுதடைந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து அதிமுகவை சேர்ந்த 18 வார்டு உறுப்பினர் சுனில் குமார், விளக்கு எரியாத மின் கம்பங்களில் தீப்பந்தம் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
வாசகர் கருத்து