மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
திருச்சியில் மாநகர அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. கர்ணபுறா மற்றும் சாதாரண புறாக்கள் பறக்கவிடும் போட்டிகளில் இன்று கர்ண புறா பந்தயம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. புறாக்கள் எல்லையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 5 மணி நேரம் என வானில் பறக்க வேண்டும். கர்ணம் அடிப்பதை உறுதி செய்ய வேண்டும், நடுவர்கள் குறிப்பிடும் இடத்தில் அமர வேண்டும். எந்தப் புறா அதிக நேரம் பறக்கிறதோ அந்தப் புறாவுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
வாசகர் கருத்து