மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
புதுச்சேரி கிராமபகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா முதல்வர் ரங்கசாமி தலைமையில் மேல்சாத்தமங்கலத்தில் நடந்தது. குடுவை ஆற்றில் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட வேளாண்துறை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு நிதி உதவியின் கீழ் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. உறுவையாறு அன்பு நகரில் ரூ.1.51 கோடியில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டியை தொடங்கி வைத்தார்,. திருக்காஞ்சி 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.2.19 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன் வேளாண் அமைச்சர் தேனி ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து