மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. தேர்வில் பெற்றவர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 250 பேர் தேர்ச்சி பெற்றனர். மண்ணாடிப்பட்டிலுள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் 32 பேர் தேர்வெழுதினர். இதில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரே கிராமத்தில் 11 பேர் தேர்ச்சி பெற்றதால் கிராமமே சந்தோசத்தில் திக்குமுக்காடியது. கிராம மக்கள் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர். ஏற்கனவே இந்த கிராமத்தில் 75 பேர் போலீசில் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், தலைமை காவலராக பணியில் உள்ளனர். தேர்வு பெற்றவர்கள் கிராம பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.
வாசகர் கருத்து