மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 14:55 IST
விழுப்புரம் மாவட்டம், வளவனூரை சேர்ந்த சக்திவேலின் மகள் யுவஸ்ரீ வயது 23. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படிக்கிறார். இவருக்கு இன்று விழுப்புரம் வளவனூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை திருமண மண்டபத்தில் சென்னை வாலிபர் சக்திவேலுடன் திருமணம் நடந்தது. யுவஸ்ரீக்கு கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று இருந்தது. தேர்வு எழுத திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் கணவருடன் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தார். கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வாசகர் கருத்து