மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 14:58 IST
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேலூர் உச்சி மகாகாளியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா கடந்த 5 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கிரிவாசகசிவம் சிவாச்சியார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நான்காம் கால யாக சாலை பூஜை மற்றும் 96 வகையான திரவிய ஹோம பூஜைகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடகி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கிராமப்புறங்களிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து