மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம், விட்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கர். இவர் நேற்று இரவு 29 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றார். காலையில் பார்த்தபோது 29 ஆடுகளும் 5 கோழிகளும் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன. நஷ்ட ஈடு கேட்டு பாஸ்கர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். நாய்களின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தி கால்நடைகள் பலியாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
வாசகர் கருத்து