சிறப்பு தொகுப்புகள் ஜூன் 09,2023 | 00:00 IST
கோவை, மருதூர் ஊராட்சி தலைவி பூர்ணிமா. காங்கிரசை சேர்ந்தவர். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பணியாளர்கள் தேர்வு செய்வதில் மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இறந்தவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் என 319 பேருக்கு முறைகேடாக ஆட்களை அமர்த்தினார். அதற்காக லஞ்சமும் பெற்றுள்ளார். இதன்மூலம் அரசுக்கு ரூ.49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மோசடி நடந்திருப்பது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து