சம்பவம் ஜூன் 09,2023 | 00:00 IST
தெலுங்கானா மாநிலத்தின் பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஒரு மாதத்துக்கு அரசின் சார்பில் நடக்கிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஆசிப் நகரில் ஏரி திருவிழா நடந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக படகுகளில் இன்ப சவாரி சென்றனர். கரீம் நகர் எம்எல்ஏவும் அமைச்சருமான கங்குலா கமலாகர் Gangula Kamalakar விழாவை தொடங்கி வைத்து, ஒரு நாட்டுப்படகில் ஏரியை சுற்றி வலம் வந்தார். வழியில் படகில் பழுது ஏற்பட்டு, தண்ணீர் உள்ளே வரத்தொடங்கியது. சில நிமிடங்களில் படகு கவிழ்ந்து ஏரியில் மூழ்கியது. நல்லவேளை... கரைக்கு அருகே வந்த பிறகு, படகு மூழ்கியதால் போலீசார் ஓடிச் சென்று அமைச்சரை அலேக்காக தூக்கி காப்பற்றினர்.
வாசகர் கருத்து