மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமிக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த அறையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயயை கட்டுப்படுத்தினர். சிவகாசி கிழக்கு போலீ்சார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து