மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 16:29 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சம்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார் . இங்கு நேற்று இரவு வளர்ப்புக்காக சுமார் 4000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார். இன்று காலை மின்தடை ஏற்பட்டு மீண்டும் அதிக மின் அழுத்தத்துடன் மின்சாரம் வந்தது. அப்போது பண்ணையில் இருந்து மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கி பண்ணை முழுதும் எரிந்து நாசமாகியது. பண்ணையில் இருந்த 4000 கோழி குஞ்சுகள், கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தளவாட சாமான்கள் உட்பட சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாசகர் கருத்து