மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 16:44 IST
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நீலமங்கலத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் சஸ்வின் வைபவ் வயது 9 நீச்சல் பழக அப்பகுதியில் உள்ள ஸ்விம்மிங் ஃபுல்லிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட நந்தகுமார் உடனடியாக மகனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மணிமங்கலம் போலீசார் உடலை மீடடு விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து