சிறப்பு தொகுப்புகள் ஜூன் 09,2023 | 00:00 IST
ரயில் விபத்துக்களை தடுக்கவும், சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்தவும், ரயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட ரயில் இயக்கம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சில மண்டலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, நாடு முழுதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பணியாளர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட்டு, விபத்துகளை தவிர்க்க முடியும் என, ரயில்வே வாரியம் நம்புகிறது. இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.
வாசகர் கருத்து