மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தளிமருங்கூரை சேர்ந்த மூதாட்டி ஜெய்சீலி வயது 70. இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகன்கள் தனியாக உள்ளூரில் குடும்பத்துடன் வசித்த வருகின்றனர். மூதாட்டி தனியாக வசித்து வந்தார். பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஜெய்சிலியை மர்ம நபர்கள் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகினர். இளைய மகன் வந்து பார்த்தபோது மூதாட்டி தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தொண்டி போலீசில் புகார் கூறினார்.
வாசகர் கருத்து