மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 17:38 IST
ஈரோடு மாவட்டம் அம்மன் பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு நேர்த்தி கடனாக வழங்கப்பட பெண் குதிரை 9 மாத கர்ப்பிணியாக உள்ளது. குதிரைக்கு வளைகாப்பு நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர். சீர்வரிசைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்தனர். குதிரைக்கு பட்டு சேலை உடுத்தி, மஞ்சள் கயிறு கட்டி, வளையல்கள் அணிவித்து ஏழு வகை சாதங்கள் ஊட்டி விட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் குதிரைக்கு மொய் செலுத்தி, பழங்களை ஊட்டி வாழ்த்தி சென்றனர்.
வாசகர் கருத்து