மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 17:56 IST
சென்னை ஆவடியடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் அப்பாய ரெட்டி 56. அரசு பஸ் டிரைவர். மேலும் வடபழனி பணிமனை திமுகவின் தொமுச நிர்வாகி. இவரது நண்பர் 7வது வார்டு திமுக அவைத்தலைவர் பன்னீர்செல்வம் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ப்ளக்ஸ் பேனர் வைத்தார். அதில்7வது வார்டு செயலாளர் முல்லை ராஜேந்திரன் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் கணவரும் மாவட்ட பிரதிநிதியுமான சரவணன் பெயர் போடவில்லை. அதற்கு அப்பாய ரெட்டியை முல்லை ராஜேந்திரன், சரவணன் மற்றும் சிலர் அடித்து தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. ஆவடி போலீசில் புகாரளித்தார். சொந்த கட்சிக்காரனுக்கே இந்த நிலைமையா என புலம்பினார்.
வாசகர் கருத்து