மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 18:56 IST
சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதி குருமடுவு வன கிராமத்தில் பால தண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் இன்று நடைபெற்றது. 27 வருடங்களாக நடைபெறும் இந்த திருமண தடை நீக்கும் யாகம், கோவிட்டால் நிறுத்தப்பட்டது. கோவிட்டுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு, கோவை, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுமார் 2000-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். யாகத்திற்கு வரும் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள களத்திர தோஷத்தை நிவர்த்தி செய்ய வாழை மரத்திற்கு மாலை சூட்டியும், பெண்கள் பாலை மரத்திற்கு மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தினர். பின்பு பரம்பரை பழி பாவங்களை போக்குவதற்கு பச்சை பந்தலை தாண்டி சென்று முருகனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து