மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 20:14 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி டான்டீ, ஏலியாஸ் கடை ஏலமன்னா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 22 யானைகள் முகாமிட்டுள்ளது. இதில் 15 யானைகள் ஏலியஸ் கடை புல் மேட்டில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு உள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில், யானைகள் முகாமிட்டு இருப்பதால் சேரம்பாடி மற்றும் தேவாலா வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து