மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 21:41 IST
கோவை-கேரள மாநிலம் பாலக்காடு இடையே ஏ மற்றும் பி என்ற இரண்டு ரயில்பாதைகள் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறது. இரவில் தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த பாதையில் செல்லும் போது சில நேரங்களில் காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்து விடுகின்றன. இப்படி 25க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்போது யானைகள் இறப்பை தடுப்பதற்காக ரயில் பாதையின் கீழ் பாலங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. ஆனால் இதுவே நிரந்தர தீர்வு கிடையாது. காடுகளுக்குள் செல்லும் ரயில் பாதைகளை முற்றிலுமாக அகற்றி இயற்கையான வழித்தடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே காட்டு யானைகளில் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இந்த வீடியோ பதிவு விளக்குகிறது.
வாசகர் கருத்து