சிறப்பு தொகுப்புகள் ஜூன் 09,2023 | 00:00 IST
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் போட்டோ ஷூட் எடுக்க ரயில்வே அனுமதி வழங்கியது. திருமண ஜோடி போட்டோ ஷூட் எடுக்க 5000 ரூபாய் செலுத்த வேண்டும். ரயில் பெட்டிகள் பேக் கிரவுண்டுடன் மணமக்கள் போட்டோ ஷூட் எடுக்க விரும்பினால் கூடுதலாக 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மதுரை ரயில்வே ஸ்டேஷன் தவிர தென் மாவட்டங்களில் உள்ள மற்ற ஸ்டேஷன்களில் போட்டோ ஷூட் எடுக்க 3000 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து