மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம். காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இளவரசி திருச்செங்கோடு பகுதியில் விவசாய நிலங்களில் கடலை பறிக்கும் வேலைக்கு செல்கிறார். வேலைக்கு செல்லும் போது பஸ் டிரைவர் சக்திவேலுக்கும், இளவரசிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. தங்களது காதலுக்கு கணவர் குமரேசன் இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்ய இளவரசி முடிவு செய்தார்.. சக்திவேலை வீட்டிற்கு அழைத்து, துாங்கிக் கொண்டிருந்த குமரேசனை கொல்ல முயன்றனர். குமரேசன் திடீரென விழித்துக் கொண்டதால் சக்திவேல் தப்பினார். குமரேசன் நாமகிரிப்பேட்டை போலீசில் மனைவி மற்றும் காதலன் சக்திவேல் மீது புகார் அளித்தார். விசாரணையில் மனைவி இளவரசியை போலீசார் கைது செய்தனர். சக்திவேலை நாமகிரிப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து