மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன மாவட்டத்தில் அதிக வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. பத்திரப் பதிவாளர்களாக பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்தனர். இவர்கள் வந்த பின் லஞ்சம் அதிகம் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகார் அளித்தோம் நடவடிக்கை இல்லை. இதனையடுத்து ஒரு வாரம் பத்திரப்பதிவுகளை மேற்கொள்வதில்லை என பத்திர எழுத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
வாசகர் கருத்து