மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் தண்ணீர் குறைந்ததால் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் வாலாஜாபாத் பகுதியில் 24 மணி நேரமும் மண் லாரிகள் அணிவகுக்கின்றன. அவலுார், வாலாஜாபாத் இடையேயான தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் விபத்து அபாயம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர். இன்று காலையில் அப்பகுதி மக்கள் தரை பாலத்தில் வந்த லாரிகளை மறித்தனர். மொத்தம் 200 லாரிகளை சிறை பிடித்தனர். இந்த வழியாக இனி லாரிகள் வரக்கூடாது என்று கோஷம் போட்டனர்.
வாசகர் கருத்து