மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் தாண்டவம் ஆடியது. ஆக்கிரமிப்பாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் போட்டனர். கடைகளை அகற்ற அவகாசம் கொடுத்தனர். கெடு முடிந்தும் பலர் ஆக்கிரமிப்புகளை எடுக்கவில்லை. முக்கிய ரோடுகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை இன்று மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. மேட்டு தெருவில் ஆக்கிரமிப்பு கடை, நடை பாதையை மறித்து வைத்த விளம்பர பலகைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அவற்றை மாநகராட்சி குடோனுக்கு கொண்டு சென்றனர்.
வாசகர் கருத்து