மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்தது. கஞ்சா விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார். வாலாஜாபேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை கேசவன் மகன் பிரபாகரன் வயது 29, கோவிந்தசேரி குப்பம் ராமன் மகன் கதிரவன் வயது 19 இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து