மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 16:55 IST
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் நெய்வாசலை சேர்ந்தவர்கள் முருகராஜ் 83 கண்ணம்மாள் 75 தம்பதிகள். கணவரை பிரிந்த கண்ணம்மாள் அதே பகுதியில் உறவினர் ரங்கராஜ் வீட்டில் வசித்து வந்தார். ரங்கராஜ் மகன் சுந்தர்ராஜ் 40 கூலி தொழிலாளி. மதுபோதையில் வீட்டுக்கு வந்தார் வீட்டில் இடையூறாக மூதாட்டி கண்ணம்மாள் இருப்பதாக கருதி கட்டையை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் கண்ணம்மாள் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். பந்தநல்லூர் போலீசார் கண்ணம்மாள் உடலை மீட்டு சுந்தர்ராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து