மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 17:18 IST
கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் யுகஆதித்தன், 31. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 6 ஆண்டுகளாக கோவை சிறையில் உள்ளார். இன்ஜினீயரான யுகஆதித்தன் சிறையில் ''இ--சைக்கிள்'' உருவாக்க திட்டமிட்டார். சிறைத்துறை போலீசார் உதவியுடன் ''இ -சைக்கிளை'', சைக்கிளை சூரிய ஒளி சோலார் பேனல் மூலமும், மிதிக்கும் போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டும், பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் என 3 விதமாக உருவாக்கினார்..
வாசகர் கருத்து