மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 19:15 IST
கோவை வெள்ளலுார் இடையர்பாளையத்தில் சித்திர புத்திர எமதர்மராஜா லட்சுமி நரசிம்மர் சமேத கோவில் உள்ளது. இந்த கோவில் 323 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், மனமுருக வேண்டிக் கொள்பவர்களுக்கு வேண்டிய அளவுக்கு நல்லது செய்பவர் எமதர்மராஜா. இந்த கோவிலும், கருவறையும் வட்ட வடிவில் இருப்பது ஒரு சிறப்பு அம்சம். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எமதர்மராஜா கோவின் சிறப்பை அறிந்து வெளியூர் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள். இங்கு வந்தால் திருமண தடை, குடும்ப கஷ்டம், போன்ற எத்தகைய பிரச்சினைகளையும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு துலாபாரம் உள்ளது. என்னென்ன குறைகளுக்கு என்னென்ன பொருட்களை துலாபாரமாக கொடுக்கலாம் என்ற பட்டியல் உள்ளது. வயது முதியவர்கள், டாக்டரால் கைவிடப்பட்டவர்கள், இதற்கு மேல் அவர்களால் வாழவே முடியாது, உணவு உட்கொள்ள முடியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு உச்சி பூஜையில் எந்த கட்டணமும் வாங்காமல் பால் ஊற்றி கொடுக்கிறோம். அந்த பாலை நோய்வாய் பட்டவர்களுக்கு கொடுத்தால் குறிப்பிட்ட காலத்தில் கஷ்டத்தில் இருந்து விடுதவை பெற்று முக்தி அடைகிறார்கள் என்பது நம்பிக்கை. அத்தகைய எமதர்மராஜா கோவிலின் சிறப்புக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
வாசகர் கருத்து