மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 16:58 IST
நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் லியோ. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் ஆடியோ லான்ச் இல்லை என அறிவிப்பு வெளியானது. விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரின் முக்கிய இடங்களில், ஆடியோ லான்ச் இல்லனா என்ன! ஆட்சியைப் பிடித்தால் போச்சு!! என்ன நண்பா? என்ற போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய், தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் பள்ளி பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ரசிகர் சந்திப்பு, மகளிர் அணி சந்திப்பு, மக்களுக்கு உணவளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசியல் நோக்கோடு செயல்படுத்தி வருகிறார். அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு வெளியாகி வரும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து