மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 19:30 IST
துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்டது கொம்புத்துறை மீனவ கிராமம். இங்கு ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கொம்புத்துறை மீனவர் மூவர் சமீபத்தில் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறினர். இவர்கள் கொம்புத்துறை கிராமத்தை 'கடையக்குடி' என அழைத்தனர். மதம் மாறிய மீனவர்களின் செயல் கொம்புத்துறை ரோமன் கத்தோலிக்க மீனவர்களை எரிச்சலடையச் செய்தது. கொம்புத்துறை கிராமத்தின் பழைய பெயர் 'கடையா' என சிலர் கூறினாலும் இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. கிராமம் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் மதம் மாறிய மீனவர் மூவர் தங்களுக்கு கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், மீனவர்கள் சங்கத்தினர் தங்களை கொம்புத்துறை கடலில் மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சுமத்தினர். மதம் மாறிய மூவர் பயன்படுத்தி கொள்வதற்காக ஐக்கிய முஸ்லிம் பேரவை சார்பில் டிராக்டர் ஒன்று வழங்கப்பட்டது. அதை பயன்படுத்த விடாமல் உள்ளூர் மீனவர்கள் தடுத்தாகவும் புகார் எழுந்துள்ளது. இஸ்லாத்துக்கு மதம் மாறிய மூன்று மீனவர்கள் கூறுவது அப்பட்டமான பொய் என கொம்புத்துறை மீனவர் சங்கம் மறுத்தது. இப்பிரச்சனை தொடர்பாக மதம் மாறியவர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ மீனவர்கள் பங்கு பெறும் முத்தரப்பு பேச்சு வார்த்தை அக்டோபர் 3 ம் தேதி கலெக்டர் தலைமையில் நடக்கவுள்ளது.
வாசகர் கருத்து