மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 20:32 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராம பகுதியில் தனியார் கெமிக்கல் கம்பெனி உள்ளது. ரசாயன கழிவு நீர் மற்றம் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் திறந்த வெளியில் விடுவதாக புகார் எழுந்துள்ளது. ரசாயன கழிவு நீர் அருகே உள்ள கிணறுகளில் கலந்து எண்ணெய் பசையுடன் கிணற்று தண்ணீர் நிறம் மாறி காட்சியளிக்கிறது. ரசாயன கழிவு நீர் நிலத்தில் கலந்ததால் 1500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . கெமிக்கல் கம்பெனி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ஆபீஸில் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து