மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 20:43 IST
இரண்டாவது இரும்பு கவச அணி சார்பாக 10 நாள் தேசிய மாணவர் படையின் பயிற்சி முகாம் திருச்சி கே.கே நகர் பள்ளியில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. கர்னல் சஞ்சீவ் திவான் தலைமையில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல், துப்பாக்கி சுடுதல், கவாத்து மற்றும் பரேடு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் நிறைவு விழாவில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய மாணவர் படை மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து