மாவட்ட செய்திகள் ஜனவரி 07,2023 | 12:18 IST
ஜி 20 உச்சி மாநாடு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டும் புதுவை பாஜக சார்பாக முதலியார் பேட்டையில் மாராத்தான் போட்டி நடந்தது. மூன்று கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சிறுவர் -சிறுமிகள், கலந்து கொண்டனர். முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான், ஏஎஃப் டி ரோடு, நூறு அடி ரோடு வழியாகச் மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜக மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் தலைமையில் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து