மாவட்ட செய்திகள் ஜனவரி 10,2023 | 00:00 IST
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஏப்ரல் 1 முதல் மின் கட்டணம் உயர்கிறது. இதனை இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. வீடுகளில் 100 யூனிட் வரை, யூனிட்டுக்கு, 1 ரூபாய் 90 காசு பெறுகின்றனர். இது இனி 2 ரூபாய் 30 பைசாவாக உயரும். 101 முதல் 200 யூனிட் வரை, யூனிட்டுக்கு 2 ரூபாய் 90 பைசா கட்டணம் உள்ளது. இனி, 3 ரூபாய் 30 காசாக மாறும். 201 முதல் 300 வரை யூனிட்டுக்கு, ரூ. 5 என்பதை, ரூ.5.45 ஆக உயர்த்த உள்ளனர். வணிக பயன்பாட்டு மின் கட்டணங்களும் உயர்கின்றன. 100 யூனிட் வரை, யூனிட்டுக்கு 5 ரூபாய் 70 பைசா வசூலித்தனர். இனி 6 ரூபாய் வாங்குவர். 101 முதல் 250 வரை யூனிட்டுக்கு ஆறு ரூபாய் 75 காசு உள்ளது. இனிமேல் ஆறு ரூபாய் 85 காசாக மாறும். 251 யூனிட்டுக்கு மேல், யூனிட்டுக்கு 7 ரூபாய் 50 பைசா வசூலிக்கின்றனர். இனி, 7 ரூபாய் 60 காசாக இது உயரும். தொழிற்சாலை மின் கட்டணம் யூனிட்டுக்கு 5 ரூபாய் 30 காசில் இருந்து 5 ரூபாய் 45 காசாக உயர்த்தப்பட உள்ளது. கட்டண உயர்வுக்கு முன் மக்கள் கருத்து கேட்க உள்ளனர்.
வாசகர் கருத்து