பொது ஜனவரி 23,2023 | 00:00 IST
காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆபத்தான நிலையில் அட்மிட் செய்யப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக காரைக்கால் அரசு மருத்துவமனை டாக்டர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர். காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து