மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
புதுச்சேரி சட்டசபையில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படும். அதற்கு மாநில திட்டக்குழுவை கூட்டி எவ்வளவு நிதி தேவை என முடிவு செய்ய வேண்டும். இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் கூடியது. கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்பிக்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு அழைப்பு அனப்பப்பட்டது. கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி விவாதிக்கப்பட்டு, பட்ஜெட் தொகை 11,500 கோடி ரூபாய் என்றும் முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக திட்ட குழு கூட்டம் முடிந்தால் கவர்னர் தமிழிசை பேட்டி அளிப்பார். ஆனால் குடியரசு தின செய்தியாளர் சந்திப்பின் போது டென்ஷனான அவர்,இனி மாநில அரசு பற்றி முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேளுங்கள். நான் பதிலளிக்க வேண்டாம் என குடியரசு தினத்தில் முடிவு எடுத்து இருப்பதாக கூறினார்.
வாசகர் கருத்து