அரசியல் பிப்ரவரி 25,2023 | 12:14 IST
தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் ராமநாதன் தலைமையில் நடந்தது. 11வது வார்டு திமுக கவுன்சிலர் பாலசுப்ரமணியன் பேசும்போது, எங்கள் பகுதியில் தார் சாலைகள் சரியில்லை. சாலைகள் போட்ட பிறகு, அதை உடைத்து, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் புதைக்கும் பணிகளை செய்கின்றனர். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில், நடிகை ஒருவர் அணிந்து வரும் ஜாக்கெட், உள்ளாடையை போல் தலைகீழாக வேலை நடப்பதாக ஒப்பிட்டு பேசினார். கூட்டத்தில் இருந்த பெண் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்து, முகம் சுளித்தனர். கவுன்சிலர் பாலசுப்ரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த துணை மேயர் அஞ்சுகம், பெண் உறுப்பினர்களுக்கு சங்கடம் ஏற்படாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். திமுக கவுன்சிலரின் சபை நாகரிகமற்ற பேச்சு அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வாசகர் கருத்து