மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 10:00 IST
உடற்பயிற்சி என்பது அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்று. அதே போல் ஆணழகன் போட்டிக்கு தயராகும் இளைஞர்கள் செய்யும் உடற்பயிற்சி இன்றும் அவர்களை இளமையுடனும் தோன்றச் செய்கிறது. இது பற்றி உலக ஆணழகன் பட்டத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் மணி கூறுகையில் தனது சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதாகவும் தற்போது ஐம்பது வயதை கடந்த பிறகும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகவும் கூறுகிறார். ஒரு முழு பாடி பில்டராக குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். புரோட்டீன் பவுடர்களை ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையின் படி அளவாக எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்றும் கூறுகிறார். 'Protein supplements for bodybuilding can be hazardous, in excess. Resorting to natural protein and avoiding steroids is safe': Mr World.
வாசகர் கருத்து