மாவட்ட செய்திகள் மார்ச் 13,2023 | 19:48 IST
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், புலி ,சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்கு உள்ளன காட்டு யானைகள் வனச்சாலையில் உலா வருகிறது. திம்பத்தில் இருந்து தலைமலை செல்லும் வனச்சாலையில் தொட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் டூவீலரில் வந்தார். அப்போது ஒற்றை யானை ஒன்று சாலையை கடந்தது. யானையை கண்ட முதியவர் சாலையோரம் விழுந்தார். யானை அவரை தாக்க முயன்றது எதிரே வந்த வாகன ஓட்டி ஒலி எழுப்பினார். அதனால் யானை அவரை எதுவும் செய்யாமல் விட்டது. இதனால் முதியவர்ர அதிர்ஷ்டவசமாக யானையிடம் இருந்து உயிர் தப்பினார்.
வாசகர் கருத்து